வெளிநாட்டு பெண்ணிடம் ஆபாச பேச்சு.. ஆட்டோ ஓட்டுநர் மீது பாய்ந்த அதிரடி

x

சென்னையில் பங்களாதேஷ் நாட்டு பெண்ணிடம் உரிய சில்லறை கேட்டு ஆபாசமாக பேசிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர் கடற்கரைக்கு ஆட்டோ மூலம் வந்த பெண், 133 ரூபாய் கட்டணத்திற்கு 200 ரூபாய் கொடுத்து சில்லறை கேட்டபோது, அவருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஆபாசமாக பேசிய வீடியோவை அப்பெண் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அடையாறு சைபர் கிரைம் போலீசார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்