டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் ஆபாச வாசகம் - கிளம்பிய சர்ச்சை

x

டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் ஆபாச வாசகம் - சர்ச்சை

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெண்களை ஆபாசமாக பொருள்படும்படி கேள்வி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான போட்டி தேர்வில், 166-வது கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை ஆபாசமாக சித்தரிக்க கூடிய வகையில், A Breastless woman's longing for sex என்ற வாசகம் இடம்பெற்றது பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கல்லாதவர்களை குறிக்கும் விதமாக தமிழில் பயவாக் பயவாக் களரனையர் என்று இருக்க, ஆங்கிலத்தில் அதனை ஆபாசமாக மொழிபெயர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்