தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா தேர்வு

தேனி மாவட்ட ஆவின் தலைவராக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா தேர்வு
Published on
தேனி மாவட்ட ஆவின் தலைவராக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேனி மாவட்ட ஆவின் இயக்குநர்கள் பதவிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில், ஓ.ராஜா தலைமையிலான அதிமுக அணி, போட்டியின்றி வெற்றிபெற்றது. இதனையடுத்து, ஆவின் பொதுமேலாளர் ராஜாகுமார் முன்னிலையில் நடந்த விழாவில் ஓ.ராஜா உள்ளிட்ட17 பேரும், இயக்குநர்களாக பொறுப்பேற்று கொண்டனர். தொடர்ந்து, இயக்குநர்கள் அனைவரும் சேர்ந்து, ஓ.ராஜாவை மாவட்ட ஆவின் தலைவராக தேர்வுசெய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com