நர்ஸ் கொ*ல - ``அவன விடாதீங்க ... தூ*குல போடுங்க..'' தாய் கதறல் பேட்டி
திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
அருகே செவிலியர் சித்ரா என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரனையில் கணவரை பிரிந்து வாழும் சித்ரா,தனது தாய் குழந்தைகளுடன் 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் மதுரையிலிருந்து திருப்பூருக்கு வந்துள்ளார். பல் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய சித்ராவை அவரது கணவர் ராஜேஷ் கண்ணா அழைத்துச் செல்ல சித்ரா பணியாற்றிய மருத்துவமனை மற்றும் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது... சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து போலீசார், ராஜேஷ் கண்ணாவை பிடித்து விசாரணை நடத்தியல், சித்ராவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
