``பிரபாகரனை பாடி ஷேமிங் செய்த சீமான்'' - வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நடிகை விஜயலட்சுமி

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அவதூறாகவும், கொச்சைப்படுத்தியும் பலமுறை பேசியுள்ளதாக, நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், சீமான் பலமுறை பிரபாகரனை உருவ கேலி செய்ததாகவும், கடந்த 2011-ல் அதற்கான ஆடியோ ஆதாரங்களை காவல்துறையினரிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், அனைவரையும் அழித்து, மக்களிடம் ஓட்டு கேட்டு முதலமைச்சராகி விடலாம் என சீமான் நினைப்பதாகவும், அவருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் விஜயலட்சுமி குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com