"தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைப்பு "- அமைச்சர் உதயகுமார் தகவல்

என்.பி.ஆர். தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்காததால் தமிழகத்தில் என்.பி.ஆர்., பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் தான் முதன் முதலாக என்.பி.ஆர் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டதாக தெரிவித்தார். 2020 இல் மூன்று புதிய கேள்விகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாவும், ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்றும் அவர் கூறினார். எனவே தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com