என்.பி.ஆர் விவகாரம்....பேரவையில் காரசார விவாதம்

என்.பி.ஆர் விவகாரத்தில், யாருக்கும் ஆபத்து ஏற்படாமல், அதை தடுத்து நிறுத்தும் அரசாக அதிமுக இருக்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.
என்.பி.ஆர் விவகாரம்....பேரவையில் காரசார விவாதம்
Published on
என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக, சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினார். தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற அரசு விரும்பவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறுப்பு தெரிவித்தார். விவாதத்தின் போது பேசிய துணை முதலமைச்சர், எந்த சமூகத்திற்கும் ஆபத்து ஏற்படாமல், அதை, அ.தி.மு.க அரசு தடுத்து நிறுத்தும் என்றார். இதை தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தின் போது கூச்சல் குழப்பம் அதிகரித்தது. குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், இதற்கு மேல் இந்த விவாதத்தை அனுமதிக்க முடியாது என நிராகரித்தார். இதைகண்டித்து, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதன்பிறகு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன
X

Thanthi TV
www.thanthitv.com