GST Road| இனி தீபாவளி, பொங்கலுக்கு சல்லுன்னு போகலாம்.. செங்கல்பட்டு ரூட்டில் வரும் அதிரடி மாற்றம்

இனி தீபாவளி, பொங்கலுக்கு சல்லுன்னு போகலாம்.. செங்கல்பட்டு ரூட்டில் வரும் அதிரடி மாற்றம்

#chengalpatturoute #gstroad செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான 68 கிலோமீட்டர் தூரத்தை 6 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 4 வழிச்சாலையாக உள்ள சென்னை -கன்னியாகுமரி ஜி.எஸ்.டி. சாலையில் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 2,500 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X