இனி பேங்க், ATM-ல பணம் எடுத்தா சுத்தி முத்தி பாருங்க - இந்த CCTV-ய பாத்தா கதிகலங்கிடும்
ரூ.1.50 லட்சம் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொளக்கநத்தம் கிராமத்தில், இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் கர்ணன், வங்கியில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து, தனது இரு சக்கர வாகன பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, தனது நண்பரிடம் பேசிக் கொணடிருந்தார். அப்போது வங்கியில் இருந்தே, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், பெட்டியில் இருந்த பணத்தை, மாற்று சாவி பயன்படுத்தி எடுத்துக் கொண்டு, தனக்காக காத்திருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி கிளம்பியுள்ளார். அதிர்ச்சி தரும் இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
