

சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கால அவகாசம் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnpds.gov.in என்ற இணைய முகவரி வட்ட வழங்கல் அலுவலகங்கள் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.