

இளம் பெண்களை சபரி மலைக்கு அனுப்ப மாட்டோம் என்று கரூரில் ஐயப்ப பக்தர்கள் உறுதிமொழி ஏற்றனர். கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு ஒன்றுக்கூடிய ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பினர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மறுப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் மேல்முறையீடு சீராய்வு மனுவினை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் அவர்கள் தெரிவித்தனர். சபரிமலைக்கு பெண்களை அனுப்ப மாட்டோம் என்றும் அவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.