TVK | NTK| ``ஒரு இன்ச் கூட நகர கூடாது'' - EVM மெஷின் வண்டியை சிறைப்பிடித்த நாதக, தவெகவினர்

``ஒரு இன்ச் கூட நகர கூடாது'' - EVM மெஷின் வண்டியை சிறைப்பிடித்த நாதக, தவெகவினர்

#tvk #ntk #tnelection2026 வாக்குப்பதிவு இயந்திரகள் வாகனத்தை முற்றுகையிட்ட நாதக, தவெகவினர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற வாகனத்தை சில கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுவாசல் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனத்தை திமுகவினர் பின் தொடர்வதாக குற்றம் சாட்டி, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் போராட்டக்காரர்கள் வாகனத்தை செல்ல அனுமதித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com