நார்வே செஸ் தொடர் - 4ம் சுற்றில் குகேஷ் வெற்றி
நார்வே செஸ் தொடரின் நான்காவது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ் வெற்றிவாகை சூடினார். நான்காவது சுற்றில் அமெரிக்க வீரர் ஃபேபியோனா கருவானா (fabiano caruana) உடன் குகேஷ் மோதினார். கிளாசிக்கல் போட்டி சமன் ஆனதால் டை-பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், வெள்ளை நிர காய்களுடன் களமிறங்கிய குகேஷ் அதில் வெற்றி கண்டார். நார்வே செஸ் தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த குகேஷ், அடுத்தடுத்து 2 போட்டிகளில் வென்று, வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளார். மேலும், தனது பிறந்தநாளில் குகேஷ் வெற்றி பெற்றது, அவருக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்தது.
Next Story
