வடமாநில இளைஞர்களை கொடூரமாக தாக்கிய பொது மக்கள்

x

ராணிப்பேட்டை பகுதியில் மாடு திருட வந்ததாக குற்றம்சாட்டி, வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை பொது மக்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றை ஒட்டிய பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பியாஸ் மற்றும் நரேந்திரன் ஆகிய இருவர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மதிய நேரத்தில் பாலாற்றங்கரை பக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தவர்களை, அப்பகுதியினர் மாடு திருட வந்ததாக குற்றம்சாட்டி கொடூரமாக தாக்கினர். பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். தற்போது தாக்குதல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்