மருத்துவமனையின் 4வது மாடியிலிருந்து தவறி விழுந்து வடமாநில இளைஞர் பலி
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து, வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவுக்கு வேலைக்கு செல்ல ரயிலில் பயணம் செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விகாஸ் பர்வன், கூலிபாளையம் ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்ததால் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விகாஸ் பர்வன், சிகிச்சை பெற விரும்பாத நிலையில், அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Next Story
