சென்னையில் பொதுக்கழிவறையில் தங்கி உணவு சமைக்கும் வடமாநில தொழிலாளர்கள்
திருவேற்காட்டில் பயன்பாட்டிற்கு வராத பொதுக்கழிவறையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு அடுத்த வீரராகபுரம் பகுதியில் தூய்மை பாரத் திட்டத்தின் கீழ் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டு இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்த நிலையில் கழிவறையில் இரண்டு வடமாநில தொழிலாளர்கள் தங்கி உணவு சமைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் இருவரையும் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தியதில், அதே பகுதியில் தனியார் கோவில் கட்டுமான பணிக்கு வந்தவர்களை கழிவறையில் தங்கவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
Next Story
