ஷட்டரை கையாலேயே திருகி உள்ளே நுழைந்த வடமாநில ஊழியர்கள் - சிசிடிவி காட்டிய பயங்கர காட்சி

x

ஷட்டரை கையாலேயே திருகி உள்ளே நுழைந்த வடமாநில ஊழியர்கள் - சிசிடிவி காட்டிய பயங்கர காட்சி

மதுரையில் கடையின் ஷட்டரை கையால் நெழித்து, பணம் திருடிய வடமாநில இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கிளாஸ் காரத் தெருவில் வடமாநிலத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் எலெக்ட்ரிக் கடையை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் கடையைத் திறக்க சென்ற போது, கடையின் ஷட்டரை நெழித்து கல்லாவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதை கண்டுஅதிர்ந்தார். சிசிடிவியை ஆய்வு செய்த போது, தனது கடையில் வேலை பார்த்த 4 வடமாநில இளைஞர்கள், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் அவர்களை கண்டித்து, போலீஸில் புகாரளிக்காமல் மன்னித்து அனுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்