சென்னையில் மெட்ரோ நிர்வாகத்தையே ஆடிப்போக வைத்த வடக்கு நபர்கள்

x

மெட்ரோ ரயில் பணி - 500 கிலோ இரும்பு திருடிய வட மாநில தொழிலாளிகள் கைது

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளின் போது 500 கிலோ இரும்பு திருடிய வடமாநில தொழிலாளிகளை போலீசார் கைது செய்தனர்.

மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவன அதிகாரி திருமலைகுமார் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கட்டுமான பணிக்கு வைத்திருந்தசுமார் 500 கிலோ இரும்பு பொருட்கள் திருட்டு போயிருப்பதாக புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கட்டுமான பணியில் ஈடுப்பட்ட தொழிலாளிகள் பீகாரை சேர்ந்த மனோஜ்குமார் யாதவ் , தர்மேந்திர பிரசாத்,கொல்கத்தாவை சேர்ந்த பரத்குமார் ராய் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முருகன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 500 கிலோ எடை கொண்ட இரும்பு பொருட்களை மீட்டனர்


Next Story

மேலும் செய்திகள்