Chennai | Death | திருநங்கையை அடித்தே கொன்ற வடமாநில இளைஞர்.. சென்னையில் நடந்த கொடூரம்..
சென்னை வானகரத்தில் திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். போரூரை சேர்ந்த திருநங்கை சில்பா. இவர், வானகரம் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி,
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துர்ஜான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். லோடுமேன் ஆக பணிபுரியும் துர்ஜான், திருநங்கை சில்பாவிடம் உல்லாசமாக இருக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, துர்ஜான் பாக்கெட்டில் வைத்திருந்த 2,500 ரூபாய் பணத்தை திருநங்கை சில்பா பிடுங்கியதால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சில்பாவை, துர்ஜான் அடித்துக் கொன்றதாக தெரிகிறது...
Next Story
