இ-பாஸ் இல்லாமல் அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் - 46 பேரை போலீசார் மடக்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

கோவையில் இ-பாஸ் இல்லாமல் கட்டுமான பணிக்கு அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 46 பேரை போலீசார் மடக்கி வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இ-பாஸ் இல்லாமல் அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் - 46 பேரை போலீசார் மடக்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்
Published on
கோவையில் இ-பாஸ் இல்லாமல் கட்டுமான பணிக்கு அழைத்து வரப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 46 பேரை போலீசார் மடக்கி வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தனியார் கட்டுமான நிறுவன பணிக்காக பீகாரை சேர்ந்த 46 தொழிலாளர்கள் சரக்கு லாரியில் வந்த போது சிங்காநல்லூர் சிக்னல் அருகே லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இ-பாஸ் இல்லாமல் அழைத்து வரப்பட்ட 46 தொழிலாளர்களையும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த போலீசார் சரக்கு லாரி ஒட்டுனரை கைது செய்தனர். 46 பேரையும் தனிமைப்படுத்திய அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com