பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநில இளைஞர் தற்கொலை முயற்சி - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

வேடசந்தூர் அருகே உள்ள சேனான்கோட்டையில் இயங்கி வரும் தனியார் சோப்பு கம்பெனியில், ஒடிசாவை சேர்ந்த லிபுன் தாலே என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு, விடுதிக்கு சென்ற இளைஞர், திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லிபுன் தாலேவிற்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com