வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி பெருங்களத்தூர்...

வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி பெருங்களத்தூர்...

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு மாற்று வழிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளதால் பெருங்களத்தூர் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி காட்சியளிக்கிறது.
Published on
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் திரும்பும் மக்கள் ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி சாலையையே பயன்படுத்தி வந்தனர். இதனால், ஆண்டுதோறும் பெருங்களத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு, வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து மீஞ்சூர், வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக கோயம்பேடு செல்லும் வகையில், வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் வாகன மயமாக காட்சியளித்து வந்த பெருங்களத்தூர் பாதை இன்று, வாகன நெரிசலின்றி காணப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com