Courtallam Falls | `இப்போ தடை இல்லை..’ - குற்றாலம் போற பிளான் இருந்தால் இப்பவே கிளம்புங்க..
#Courtallam #CourtallamFalls #MainFalls #ThanthiTV
Courtallam Falls | `இப்போ தடை இல்லை..’ - குற்றாலம் போற பிளான் இருந்தால் இப்பவே கிளம்புங்க.. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தென்காசி மற்றும் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அருவிகளில் நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்கின்றனர்.
