``யாரும் ஏமாற வேண்டாம்..'' உயர் அதிகாரி பெயரில் தில்லாலங்கடி வேலை... பகீர் பின்னணி
ஆவடி காவல்துறை ஆணையரான, சந்தீப் ராய் ரத்தோரரின் பெயரில், மீண்டும் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி, மோசடி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த போலி வலைதளக்கணக்கு நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் சந்தீப் ராய் ரத்தோர் பெயரில் போலி facebook கணக்கை துவங்கி 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், தேனாம்பேட்டை சேர்ந்த என்பவர் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது, குறிப்பிடத்தக்கது.
Next Story
