"மோகன்ராஜ் மறைவுக்கு யாரையும் குறை சொல்ல முடியாது" - ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் சொன்ன தகவல்

வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் முறையான பாதுகாப்பு இருந்தது"

சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த விவகாரத்தில், வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் முழுமையான பாதுகாப்பு வசதி இருந்தததாக ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் தெரிவித்துள்ளார் . இது குறித்து சென்னை வடபழனியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், சண்டை பயற்சியாளர் மோகன்ராஜ் மறைவிற்கு யாரையும் குறைசொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில், ஆம்புலன்ஸ் இல்லையென்பது பொய்யான தகவல் என்றும், முறையான இன்சூரன்ஸ் வசதியும் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com