பட்டு புடவை வாங்க இனி காஞ்சிபுரம் போக வேண்டாம் - சென்னையில் வந்தாச்சு நம்ம `பிரியதர்ஷினி சில்க்ஸ்'
சென்னை கே.கே.நகரில் பிரியதர்ஷினி சில்க்ஸ் என்ற புதிய ஷோரூம் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டு உள்ளது. பிரபல தொழில் அதிபர் நல்லிகுப்புசாமி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கடையில் 8 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை உள்ள பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பேசிய சில்க்ஸின் உரிமையாளர் பிரியதர்ஷினி, பட்டு புடவை உள்ளிட்டவைக்காக காஞ்சிபுரம் செல்ல வேண்டியது இல்லை எனவும், காஞ்சிபுரத்தில் கிடைப்பதை விட குறைவான விலையில் ஜவுளிகள் கிடைக்கும் எனவும், எக்ஸ்க்ளூசிவ் கலென்சன்ஸ் இருப்பதாகவும் கூறினார். மேலும், வித விதமான வண்ணங்களில், பல்வேறு புதிய டிசைன்களில் பட்டு சேலைகள் விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story