"யாராக இருந்தாலும்... நிலைக்க முடியாது.." - பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி
சிரஞ்சீவியின் மகனாக இருந்தாலும், தன் மகனாக இருந்தாலும் திறமை இல்லாமல் திரைத்துறையில் நிலைக்க முடியாது என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்... அவர் நடித்துள்ள ஹரிஹர வீரமல்லு திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஐதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பவன் கல்யாண், தனக்கு அரசியல் களத்தில் நல்ல பெயர் இருக்கும் நிலையிலும், சினிமா துறையில் சில ஹீரோக்களுக்கு இருக்கும் வரவேற்பு கூட தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்... காரணம் தன் முழு கவனமும் சினிமாவில் இல்லை என்றும், சமூக நலன் மற்றும் அரசியலுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
