``யார் சொன்னாலும் என் கீழடி ஆய்வு முடிவை திருத்தவே மாட்டேன்’’

x

கீழடி குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து

தன் மீது தவறு என்றால் விமர்சிக்கலாம்; ஆனால், தனது ஆய்வை திருத்த முடியாது என்று இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேசிய அவர், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட்டால் தமிழரின் பெருமை உலகளவில் உயரும் என்றார். கீழடி ஆய்வின்படி தமிழர்கள் கி.மு. 800 காலத்திலேயே வாழ்ந்தனர் எனவும், இந்த ஆய்வு அறிக்கையில் சந்தேகம் இருந்தால் மறு ஆய்வு செய்யலாம், அதே தகவல்கள் தான் மீண்டும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்