"சத்துணவு மையங்களை மூடும் திட்டம் இல்லை" - சமூக நலத்துறை தகவல்

25 குழந்தைகளுக்கும் கீழ் பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
"சத்துணவு மையங்களை மூடும் திட்டம் இல்லை" - சமூக நலத்துறை தகவல்
Published on

தமிழகம் முழுவதும் 42 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சத்துணவு அமைப்பாளர்களின் காலிபணியிடங்களை நிரப்ப ஒரே இடத்தில் 2 சத்துணவு மையங்கள் இயங்கி வந்தால் அதை ஒரே மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மட்டுமே நடைபெறுவதாக சமூக நலத்துறை கூறியுள்ளது.

தமிழகம் முழுதும் சத்துணவு அமைப்பாளர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை சரி செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 25 குழுந்தைகளுக்கு கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என சமூக நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com