கும்மிடிப்பூண்டி இரும்பு உருக்கு ஆலையில் வெடி விபத்து ஏற்படவில்லை – தொழிற்சாலை விளக்கம்

கும்மிடிப்பூண்டி இரும்பு உருக்கு ஆலையில் வெடி விபத்து ஏற்படவில்லை – தொழிற்சாலை விளக்கம்

கும்மிடிப்பூண்டி இரும்பு உருக்கு ஆலையில் வெடி விபத்து ஏற்படவில்லை – தொழிற்சாலை விளக்கம் இரும்பு உருக்கு ஆலையில் வெடி விபத்து ஏற்படவில்லை – தொழிற்சாலை விளக்கம் கும்மிடிப்பூண்டியில் தனியார் இரு​​ம்பு உருக்கு ஆலையில் மர்ம பொருள் வெடித்ததால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொழிற்சாலை நிர்வாகம் மறுத்துள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் மர்ம பொருள் வெடித்து சிதறியதால் குடியிருப்பு பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்ததாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதற்கு விளக்கமளித்துள்ள தனியார் நிறுவனம், தங்களது தொழிற்சாலையில் அதிக சத்தத்தை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஏதாவது பொருட்கள் வெடித்து இருந்தால் அந்த கருவி தானாக இயங்கி தொழிலாளர்களை எச்சரிக்கும் என்றும், ஆனால் அதுபோல் வெடிவிபத்து ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது நிறுவனத்தில் அரசு அதிகாரிகள், சோதனை செய்துவிட்டு, வெடிவிபத்து ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாகவும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com