"பாத்தா சந்தேகமே வராது.." - வெளியான பகீர் சிசிடிவி காட்சி

x

இருசக்கர வாகனம் திருடு போன சம்பவத்தின் சிசிடிவி காட்சி

பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருடு போன சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கே.புதூர் சங்கர் நகர் 4 வது தெருவைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது வீட்டின் முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்