தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்களான பாரதிராஜா, தியாகராஜன், கே ராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் பல முக்கிய கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து க்யூப் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு கலந்து பேசினர். அதன்தொடர்ச்சியாக சில மாற்றங்களை உடனடியாக அமல்படுத்த இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி, தயாரிப்பாளர்கள் திரையிடும் பிரிவியூ ஷோ மற்றும் சென்சார் காட்சி உள்ளிட்டவைக்கு கட்டணம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ஒரு நிமிட ட்ரெய்லருக்கு இனிமேல் எந்தவித கட்டணமும் இல்லை என்றும், வாழ்நாள் க்யூப்புக்கு இனிவரும் காலங்களில் ஷிப்டிங் வசதி உண்டு என்ற முடிவுகளும் உடனடியாக அமலுக்கு வருவதாக அதில் தெரிவித்துள்ளனர்.