என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி இரண்டாவது அனல் மின்நிலையத்தின் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் எட்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்திருந்தனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை அன்புராஜா என்ற ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.