

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "நிவர்" என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல், தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. நிவர் புயல் வரும் 25ஆம் தேதி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக 25ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.