நிர்மலாதேவி மீது பொய் வழக்கு போடப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு.

மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் மத்திய சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலா தேவி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
நிர்மலாதேவி மீது பொய் வழக்கு போடப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு.
Published on
கடந்த 2018 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவிக்கு,கடந்த 12 ஆம் தேதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் வழங்கியது.அவரின் சகோதரர் ரவியும், குடும்ப நண்பர் மாயாண்டியும் தலா 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு பிரமாண பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து நிர்மலா தேவி இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.நிர்மலா தேவி எங்கு வேண்டுமானாலும் தங்கலாம் என்றும், ஆனால் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், நிர்மலாதேவி மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார்
X

Thanthi TV
www.thanthitv.com