டூவீலரில் இருந்ததை கண்டு... ஷாக்கான போலீசார் - கோத்தகிரியில் 15 பேர் கைது...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடமானை வேட்டையாடியதாக எஸ்டேட் மேலாளர் உட்பட 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் , அப்போது பொம்மன் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் கடமான் இறைச்சி இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கோத்தகிரி அருகே உள்ள மார்வாளா தனியார் எஸ்டேட் பகுதியில் கடமனை வேட்டையாடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து எஸ்டேட் மேலாளர் உட்பட 15 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com