Nilgiris | Tiger |கம்பீர நடைபோட்ட புலி | அசந்து நின்ற டூரிஸ்ட் | வியக்கவைக்கும் காட்சி

கம்பீர நடைபோட்ட புலி | அசந்து நின்ற டூரிஸ்ட் | வியக்கவைக்கும் காட்சி

Nilgiris | Tiger |கம்பீர நடைபோட்ட புலி | அசந்து நின்ற டூரிஸ்ட் | வியக்கவைக்கும் காட்சி #nilgiris #tiger #tourist #thanthitv முதுமலை மாயார் சாலையில் கம்பீரமாக உலா வந்த புலி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் புலி ஒன்று சாலையோரத்தில் உலா வந்தது. முதுமலை வனப்பகுதிக்குட்பட்ட மாயார் செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புலி, வாகனங்களைக் கண்டு அச்சமின்றி மெதுவாக நடந்து வந்தது. பின்னர் சாலையோர மரங்களை முகர்ந்து தனது எல்லைப் பகுதியை அடையாளப்படுத்திய புலி, சாலையைக் கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த அரிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர். வனப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com