Nilgiri | "கடும் நடவடிக்கை.." - டூரிஸ்ட்களுக்கு பறந்த எச்சரிக்கை

கடும் நடவடிக்கை.." - டூரிஸ்ட்களுக்கு பறந்த எச்சரிக்கை

Nilgiri | "கடும் நடவடிக்கை.." - டூரிஸ்ட்களுக்கு பறந்த எச்சரிக்கை நீலகிரி மாவட்டம் முதுமலை மாயார் சாலையில் வனவிலங்குகளைத் தொந்தரவு செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள், மிக நெருக்கமான தூரத்தில் நின்று தொந்தரவு செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, வனவிலங்குகளைக் கண்டால் குறைந்தது 50 மீட்டர் இடைவெளியில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்போர் மீது குற்றவழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com