Nilgiris Lorry Accident | வந்த வேகத்தில் நேருக்கு நேர் மோதிய லாரி - அப்பளம் போல் நொறுங்கிய ஜீப்..
வந்த வேகத்தில் நேருக்கு நேர் மோதிய லாரி - அப்பளம் போல் நொறுங்கிய ஜீப்..
#Nilgiris #LorryAccident #Ooty #ThanthiTV Nilgiris Lorry Accident | வந்த வேகத்தில் நேருக்கு நேர் மோதிய லாரி - அப்பளம் போல் நொறுங்கிய ஜீப்.. 2 பேருக்கு நேர்ந்த கதி உதகை அருகே எல்லக்கண்டி சாலையில், லாரியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். கேரட் கழுவும் பணியை முடித்துவிட்டு, 9 பேரும் ஜீப்பில் எமரால்டு நோக்கிச் சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பெரியார் நகரைச் சேர்ந்த கலாவாணி, 34, மற்றும் சிந்தாமணி ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். பலத்த காயமடைந்த 5 பேர் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
