தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் 2- வது இடம் வென்ற நீல்கிரிஸ் அணி

14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று ஊர் திரும்பிய நீல்கிரிஸ் அணிக்கு குன்னூரில் பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் 2- வது இடம் வென்ற நீல்கிரிஸ் அணி
Published on
14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று ஊர் திரும்பிய நீல்கிரிஸ் அணிக்கு குன்னூரில் பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லக்னோவில் நடந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 3 அணிகள் உள்பட 16 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில் நீல்கிரிஸ் அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போட்டியில், முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. குன்னூர் வந்த நீல்கிரிஸ் அணியினருக்கு, மாவட்ட ஹாக்கி சங்கம் மற்றும் மக்கள் சார்பாக பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
X

Thanthi TV
www.thanthitv.com