Nilgiri | கோயிலுக்குள் நுழைந்த கரடி - விரட்டி விரட்டி ஓடவிட்ட ஊர் மக்கள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை கிராமத்தில் அமைந்துள்ள கோயிலுக்குள் கரடி நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உணவு தேடி கோயிலுக்குள் நுழைந்த கரடியை பொதுமக்கள் விரட்ட முயன்றனர். அப்போது, தேயிலைத் தோட்டம் வழியாக நடந்து சென்ற கரடி, பின்னர் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. கரடியின் தொடர் நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ள கிராம மக்கள், கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com