உச்சம் தொட்ட நீலகிரி கேரட் - விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர் மழை காரணமாக 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நீலகிரி கேரட், தற்போது 85 ரூபாய் வரை உச்சம் தொட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக தோட்டத்தில் கேரட்கள் அழுகத் துவங்கியது. இதனால், விவசாயிகளுக்கு கிலோ ஒன்றிற்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்தது. இந்நிலையில், தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் நீலகிரி கேரட் கிலோ 85 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story