பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளை தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை கண்டித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதகையில் கண்டன பேரணி நடத்தினர். மாற்று வழி செய்யாமல், வெளியிட்டுள்ள இயற்கை வேளாண்மை அறிவிப்பு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று, அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பும் நடைபெற்றது.