Government hospital | அரசு ஹாஸ்பிடலில் அலட்சிய பதில்.. கொதிக்கும் உறவினர்கள்
"ஆம்புலன்ஸும் கிடையாது.. வீல் சேரும் கிடையாது.. கிளம்புங்க" - அரசு ஹாஸ்பிடலில் அலட்சிய பதில்.. கொதிக்கும் உறவினர்கள்
காட்டெருமை தாக்கி காயமடைந்தவருக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தராமல் கூடலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே காட்டெருமை தாக்கி படுகாயமடைந்த பன்னீர்செல்வம் 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகைக்கு அழைத்து செல்வதற்காக வாகனத்தில் ஏற்றப்பட்டார். அப்போது அவரது உறவினர்கள் கேரளாவில் சிகிச்சை அளித்துக் கொள்வதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தனியார் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லுங்கள் எனக் கூறியதோடு, ஆம்புலன்சில் ஏற்ற வீல் சேரும் வழங்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.
Next Story
