"அப்பப்பா என்ன வெயில்.." படையெடுத்த யானைகள் - பார்த்து ரசித்த மக்கள்

x

"அப்பப்பா என்ன வெயில்.." படையெடுத்த யானைகள் - பார்த்து ரசித்த மக்கள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க நீர்த்தேக்கத்திற்கு காட்டு யானைகள், கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றன. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வெப்பம் ஏற்பட்டு வனப்பகுதிகள் முழுவதும் வறட்சியாக காணப்படுகிறது, இந்த நிலையில் வெப்பத்தை தணிக்க யானை கூட்டங்கள் குட்டிகளோடு தண்ணீருக்குள் இறங்கி வெப்பத்தை தணித்து வருகின்றன.. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்