"நிகிதாவை விசாரிக்க வேண்டும்"... அஜித் குமார் தாயை சந்தித்தபின் பிரேமலதா ஆவேசம்
இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பில் தொடர்புடைய காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம். மடப்புரத்தில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பதினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அஜித் குமாரை தாக்கிய காவலர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், புகார் கொடுத்த நிகிதாவை முதலில் போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். அஜித் குமார் கொலை சம்பவத்தில் உண்மை நிலை மக்களுக்குத் தெரிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story