ஈரோட்டில் நைஜீரியா கால்பந்தாட்ட வீரர் கைது... பகீர் பின்னணி
ஈரோட்டில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட, நைஜீரியா நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட வீரரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் விஜய மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மதுவிலக்கு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட வீரரான, ஜோன்ஸ் டுரோ மைக்கேல் என்பவர் மெத்த பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 151 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
