பாபா பக்ருதீன் அதிரடி கைது... பரபரத்த NIA சோதனை... வெளியான காரணம்... | NIA
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 5 மணி நேர சோதனைக்குப்பின் என்.ஐ.ஏ அதிகாரிகள், பாபா பக்ருதீனை கைது செய்து அழைத்து சென்றனர்.
பாபா பக்ருதீன், தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது. அதனையடுத்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், தொலைபேசி உரையாடல்களை கைப்பற்றியும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு சோதனை நடத்திய நிலையில், 2வது முறையாக சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் பாபா பக்ருதீனை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரிடம் இருந்து பென் ட்ரைவ் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
Next Story
