விசிக நபர் கொடூர கொலை.. சிக்கியவுடன் போடப்பட்ட மாவுக்கட்டு

x

நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நபரை கொன்ற வழக்கில் 3 பேர் கைதான நிலையில், கொலை செய்தவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பணப்பிரச்சனை காரணமாக, விசிக நிர்வாகியான பாலாஜி என்பவரை திருநாவுக்கரசு என்பவர் குடும்பத்துடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் திருநாவுக்கரசு கத்தியால் பாலாஜியை குத்தியதாக கூறப்படும் நிலையில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்த போலீசார், பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நெய்வேலி புதிய அனல் மின் நிலையம் அருகே பதுங்கியிருந்த திருநாவுக்கரசை போலீசார் மடக்கி பிடித்தபோது, சிமெண்ட் கட்டையில் இடித்து கீழே விழுந்ததால் திருநாவுக்கரசுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனையில் திருநாவுக்கரசுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. மேலும் திருநாவுக்கரசின் உறவினர்கள் இருவரை கைது செய்த போலீசார், அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்