மொத்தமாக மாறிய புதுச்சேரி..புத்தாண்டு Vibe-ல் மக்கள் | Puducherry | New year
புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கடற்கரைகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதியம் முதல் ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் சாலையில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன. மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சைக்கு செல்லும் வாகனங்களுக்கு தனியாக வழி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒயிட் டவுன் பகுதியில் உள்ள தேவாலயங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரை வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த 10 இடங்களில் தற்காலிக பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்க்கிங் இடத்தில் இருந்து கடற்கரை சாலை செல்ல இலவசமாக 30 அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
